Song 651
தார ணிக்கதி பாவி யாய்வெகு
- Sthalam
- காசி
- Raagam
- சந்த்ர கெளன்ஸ்
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தான தத்தன தான தானனதான தத்தன தான தானனதான தத்தன தான தானனதனதான
Lyrics
தார ணிக்கதி பாவி யாய்வெகுசூது மெத்திய மூட னாய்மனசாத னைக்கள வாணி யாயுறுமதிமோக
தாப மிக்குள வீண னாய்பொருவேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்தாமு யச்செயு மேது தேடியநினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவியமோது தற்புணர் வான நேயர்கள்பூசு மெய்த்திரு நீறி டாஇருவினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடிகாண வைத்தருள் ஞான மாகியபோத கத்தினை யேயு மாறருள்புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமுனேவ ளைத்திடு போதுமேவியமாய வற்கித மாக வீறியமருகோனே
வாழு முப்புர வீற தானதுநீறெ ழப்புகை யாக வேசெய்தமாம திப்பிறை வேணி யாரருள்புதல்வோனே
கார ணக்குறி யான நீதியரான வர்க்குமு னாக வேநெறிகாவி யச்சிவ நூலை யோதியகதிர்வேலா
கான கக்குற மாதை மேவியஞான சொற்கும ராப ராபரகாசி யிற்பிர தாப மாயுறைபெருமாளே.
