Song 634
கோங்க முநகுயு மெலிய வீங்கு புளக களப
- Sthalam
- கழுகுமலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்த தனன தனன தாந்த தனன தனனதாந்த தனன தனனந்தனதான
Lyrics
கோங்க முநகுயு மெலிய வீங்கு புளக களபமேந்து குவடு குழையும்படிகாதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினியதேங்கு கலவி யமுதுண்டியல்மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்வாய்ந்த துயிலை மிகவுந்தணியாத
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையைநீந்தி அமல அடிவந்தடைவேனோ
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகரமோங்கு ததியின் முழுகும்பொருசூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்ஊர்ந்து மயில துலவுந்தனிவேலா
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருகவேங்கை வடிவு மருவுங்குமரேசா
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளைவேண்டு மளவி லுதவும்பெருமாளே.
