Song 625
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
- Sthalam
- குன்றக்குடி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்த தானன தனதனன தந்த தானனதனதனன தந்த தானனதனதான
Lyrics
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழுகலவிதரு கின்ற மாதரொடுறவாடிக்
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்கனியிதழை மென்று தாடனைசெயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடியதுகில்நெகிழ வண்டு கோகிலமயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசைதுயிலவச இன்ப மேவுதலொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழஎழுகடல்ப யந்து கோவெனஅதிகோப
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடுஇரணமுக சண்ட மாருதமயிலோனே
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தடவயலிநகர் குன்ற மாநகருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்வழிபடுதல் கண்டு வாழ்வருள்பெருமாளே.
