Song 603
புற்புதமெ னாம அற்பநிலை யாத
- Sthalam
- திருச்செங்கோடு
- Raagam
- நவரஸ கன்னட
- Thalam
- ஆதி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தான தத்ததன தானதத்ததன தானதனதான
Lyrics
புற்புதமெ னாம அற்பநிலை யாதபொய்க்குடில்கு லாவுமனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மானபுத்திசலி யாதபெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாயநிட்டையுடன் வாழுமடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்நிற்கும்வகை யோதநினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோதசக்ரகதை பாணிமருகோனே
தர்க்சமண் மூகர் மிக்ககழு வேறவைத்தவொரு காழிமறையோன
கற்புவழு வாது வெற்படியின் மேவுகற்றைமற வாணர்கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல காலகற்பதரு நாடர்பெருமாளே.
