Song 594
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்
- Sthalam
- திருச்செங்கோடு
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தனதந்தத் தனத்தந் தாத்தனதனதான
Lyrics
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்மஞ்சட் பிணிப்பொன் காட்டுவரநுராக
வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்வண்பற் றிருப்புங் காட்டுவர்தனபாரச்
சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்சங்கக் கழுத்துங் காட்டுவர்விரகாலே
சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்தங்கட் கிரங்கங் காட்டுவதொழிவேனோ
பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமைபங்கிற் றகப்பன் தாட்டொழுகுருநாதா
பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்பங்கப் படச்சென் றோட்டியவயலுரா
கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடுகும்பிட் டிடக்கொண் டாட்டமொடணைவோனே
குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டியகொங்கிற் றிருச்செங் கோட்டுறைபெருமாளே.
