Song 590
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
- Sthalam
- திருச்செங்கோடு
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தந் தானன தனத்தந் தானனதனத்தந் தானனதனதான
Lyrics
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரியகருப்பஞ் சாறெனுமொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகளள்கடைக்கண் பார்வையிலழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெறவிருப்பஞ் சாலவுமுடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையைவிடற்கஞ் சேலெனஅருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையைஅறுக்குங் கூரியவடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரையடுக்கும் போதகமுடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிகதிருச்செங் கோபுரவயலுரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகியதிருச்செங் கோடுறைபெருமாளே.
