Song 585
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
- Sthalam
- திருச்செங்கோடு
- Raagam
- ஆஹிரி
- Thalam
- ஆதி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தான தந்த தந்தான தந்ததந்தான தந்ததனதான
Lyrics
அன்பாக வந்து உன்றாள் பணிந்துஐம்பூத மொன்றநினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்களம்போரு கங்கள்முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்றுகொண்டாடு கின்றகுழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டிகுன்றா மலைந்துஅலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்தவம்பார் கடம்பையணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்வம்பே தொலைந்தவடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொசெஞ்சேவல் கொண்டுவரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்தசெங்கோ டமர்ந்தபெருமாளே.
