Song 580
மாயா செர்ருப முழுச்ச மத்திகள்
- Sthalam
- விராலிமலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தனான தனத்த தத்தனதானா தனான தனத்த தத்தனதானா தனான தனத்த தத்தனதனதான
Lyrics
மாயா செர்ருப முழுச்ச மத்திகள்ஓயா வுபாய மனப்ப சப்பிகள்வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள்முநிவோரும்
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்ஏகாச மீது தனத்தி றப்பிகள்வாண ரிணரென் முழுப்பு ரட்டிகள்வெகுமோகம்
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்ஈயாத போதி லறப்பி ணக்கிகள்ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள்பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்கோமாள மான குறிக்க ழுத்திகள்ஆசார வீன விலைத்த னத்தியருறவாமோ
காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினைஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்காணாத வாறு குடிக்கு மப்பொழுதுரலோடே
கார்போலு மேனி தனைப்பி ணித்தொருபோர்போ லசோதை பிடித்த டித்திடகாதோடு காது கையிற்பி டித்தழுதினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்வீறான மாம னெனப்ப டைத்தருள்வயலுரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்சூர்மாள வேலை விடுக்கும் அற்புதவேலா விராலி மலைத்த லத்துறைபெருமாளே.
