Song 578
காமாத்திர மாகி யிளைஞர்கள்
- Sthalam
- விராலிமலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானாத்தன தான தனதனதானாத்தன தான தனதனதானாத்தன தான தனதனதனதான
Lyrics
காமாத்திர மாகி யிளைஞர்கள்வாழ்நாட்கொடு போகி யழகியகாதாட்டிய பார இருகுழையளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனிலார்வாட்கடை யீடு கனகொடுகாலேற்றுவை வேலின் முனைகடையமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்துநீலோற்பல ஆசில் மலருடனேராட்டவி நோத மிடும்விழிமடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளறநீதோற்றிமு னாளு மடிமையையீடேற்றுத லாலுன் வலிமையைமறவேனே
சீமாட்டியு மாய திரிபுரைகாலாக்கினி கோப பயிரவிசீலோத்தமி நீலி சுரதிரிபுவநேசை
சீகார்த்திகை யாய அறுவகைமாதாக்கள்கு மார னெனவெகுசீராட்டொடு பேண வடதிசைகயிலாசக்
கோமாற்குப தேச முபநிடவேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்கோதாட்டி ஸ்வாமி யெனவருமிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷமாறாக்கொடை நாளு மருவியகோனாட்டுவி ராலி மலையுறைபெருமாளே.
