Song 568
சீரான கோல கால நவமணி
- Sthalam
- விராலிமலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தான தான தனதனதானான தான தான தனதனதானான தான தான தனதனதனதான
Lyrics
சீரான கோல கால நவமணிமாலாபி ஷேக பார வெகுவிததேவாதி தேவர் சேவை செயுமுகமலராலும்
சீராடு வீர மாது மருவியஈராறு தோளு நீளும் வரியளிசீராக மோது நீப பரிமளஇருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்ஜநமுத மூர்வ லாரி மடமகள்ஆதார பூத மாக வலமிடமுறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்ஞானாபி ராம தாப வடிவமும்ஆபாத னேனு நாளு நினைவதுபெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்மீதேறி மாறி யாடு மிறையவர்ஏழேழு பேர்கள் கூற வருபொருளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரிலுடாடி யால வாயில் விதிசெய்தலீலாவி சார தீர வரதரகுருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவனீடேறு மாறு பாநு மறைவுசெய்கோபால ராய னேய முளதிருமருகோனே
கோடாம லார வார அலையெறிகாவேரி யாறு பாயும் வயலியில்கோனாடு சூழ்வி ராலி மலையுறைபெருமாளே.
