Song 553
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
- Sthalam
- திருசிராப்பள்ளி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்த தனதனன தந்ததனதனன தந்ததனதான
Lyrics
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கைஒருவரொடு செங்கையுறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தைஒருவரொடி ரண்டுமுரையாரை
மருவமிக அன்பு பெருகவுள தென்றுமனநினையு மிந்தமருள்தீர
வனசமென வண்டு தனதனன வென்றுமருவுசர ணங்களருளாயோ
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்கஅடலிடுப்ர சண்டமயில்வீரா
அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கிஅடிதொழவி ளங்குவயலுரா
திருவையொரு பங்கர் கமலமலர் வந்ததிசைமுகன்ம கிழ்ந்தபெருமானார்
திகுதகுதி யென்று நடமிட முழங்குத்ரிசிரகிரி வந்தபெருமாளே.
