Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 551

இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தந்தத் தனதன தந்தத்தனதன தந்தத்தனதான

Lyrics

இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்றிடைகொடு வஞ்சிக்கொடிபோல்வார்

இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்திதழமு துந்துய்த்தணியாரக்

களபசு கந்தப் புளகித இன்பக்கனதன கும்பத்திநட்முழ்குங்

கலவியை நிந்தித் திலகிய நின்பொற்கழல்தொழு மன்பைத்தருவாயே

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்சதுமறை சந்தத்தொடுபாடத்

தரிகிட தந்தத் திரிகிட திந்தித்தகுர்தியெ னுங்கொட்டுடனாடித்

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்சிறுவஅ லங்கற்றிருமார்பா

செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்திரிசிர குன்றப்பெருமாளே.

All songs →