Song 517
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோ டி
- Sthalam
- கயிலைமலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனனத் தான தனதன தனனத் தானதனதன தனனத் தானதனதான
Lyrics
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோ டிசிவவழி யுடனுற் றேகபரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோலதிரிபுர மெரியத் தீயினகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகியிருள்கதி ரிலிபொற் பூமிதவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவரிளையவ னெனவித் தாரமருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்பழமறை பணியச் சூலமழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவுபரியினை மலர்விட் டாடிஅடியொர்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோலமருள்செயு முமையிற் பாகரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொடடியவர் கயிலைக் கானபெருமாளே.
