Song 510
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
- Sthalam
- சிதம்பரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்ததத்த தத்த தாத்ததனதான
Lyrics
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்வைச்சி றைச்ச பாத்ரமநுபோகம்
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கைமட்டு லப்ப தார்த்தமிடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்குமெய்ச்சி ளைச்ச ஈக்குமிரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கிஇப்படிக்கு மோக்ஷமருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றிபொற்ப தத்து ளாக்குபுலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்குபுத்தி மெத்த காட்டுபுனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்குபைச்சி லைக்கு மாட்கொளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்டபத்த ருக்கு வாய்த்தபெருமாளே.
