Song 450
கைத்தருண சோதி யத்திமுக வேத
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தான தத்ததன தானதத்ததன தானதனதான
Lyrics
கைத்தருண சோதி யத்திமுக வேதகற்பகச கோத்ரப்பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணிகத்தர்குரு நாதப்பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கானவெற்றி யயில் பாணிப்பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசுவெற்றிமயில் வாகப்பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்புதிக்கினினி லாதப்பெருமாள்காண்
தித்திமிதி தீதே னொத்திவிளை யாடுசித்திரகு மாரப்பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலைதொட்டகவி ராஜப்பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவுசுத்தசிவ ஞானப்பெருமாளே.
