Song 432
பாண மலரது தைக்கும் ...... படியாலே
- Sthalam
- திருவருணை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனதன தத்தம்தனதான
Lyrics
பாண மலரது தைக்கும்படியாலே
பாவி யிளமதி கக்குங்கனலாலே
நாண மழிய வுரைக்குங்குயிலாலே
நானு மயலி லிளைக்குந்தரமோதான்
சேணி லரிவை யணைக்குந்திருமார்பா
தேவர் மகுட மணக்குங்கழல்வீரா
காண அருணையில் நிற்குங்கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும்பெருமாளே.
