Song 366
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
- Sthalam
- திருவானைக்கா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதனதான
Lyrics
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்வீதிக் கேதிரி பப்பர மட்டைகள்முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள்களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள்எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்மோகப் போகமு யக்கிம யக்கிகள்சூறைக் காரிகள் துக்கவ லைப்படலொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பணகாயத் ணசெப மர்ச்சனை யைச்செயுமுநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தமவேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல்மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலைபாயச் சாலித ழைத்திர தித்தமுதாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதியுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திருநீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிருஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படுபெருமாளே.
