Song 361
காவிப் பூவை யேவை யிகல்கவன
- Sthalam
- திருவானைக்கா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத் தான தான தனதனதானத் தான தான தனதனதானத் தான தான தனதனதனதான
Lyrics
காவிப் பூவை யேவை யிகல்கவனநீலத் தால கால நிகர்வனகாதிப் போக மோக மருள்வனஇருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கணமாயத் தார்கள் தேக பரிசனகாமக் ரோத லோப மப மிவைசிதையாத
பாவிக் காயு வாயு வலம்வரலாலிப் பார்கள் போத கருமவுபாயத் தான ஞான நெறிதனையினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதபநேசித் தார வார பரிபுரபாதத் தாளு மாறு திருவுளநினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயிலாலித் தால கால மெனவுயர்கூளிச் சேனை வான மிசைதனில்விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினைபாறச் சீற லேன பதிதனைகோலக் கால மாக அமர்செய்தவடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிளபாளைத் தாறு கூறு படவுயராலைச் சோலை மேலை வயலியிலுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுடனாடிப் பாடி நாடி வருதிருஆனைக் காவில் மேவி யருளியபெருமாளே.
