Song 354
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
- Sthalam
- திருவானைக்கா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தானத் தானன தந்தன தானத் தானனதந்தன தானத் தானனதனதான
Lyrics
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவியஐந்தலை நாகப் பூஷணரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமுமங்கையி னானிற் பூசையுமணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்வண்டுழ லோதித் தாழலிலிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச்சேர்வையில்மங்கியெ யேழைப் பாவியெனழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணிகுண்டலி யாலப் போசனியபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதிகுன்றது வார்பொற் காரிகையருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலைதிண்புய மாரப் பூரணமருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடியதென்திரு வானைக் காவுறைபெருமாளே.
