Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 328

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத்தனதான

Lyrics

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்பிறக்கிட்டுப் படக்கற்பித்திளைஞோர்தங்

கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்டுருக்கிக்கற் பழிக்கப்பொற்பெழுகாதல்

புறப்பட்டுக் களிக்கக்கற் புதர்தைப்பிட் டரக்கிப்பொற்பணிக்கட்டிற் புறத்துற்றுப்புணர்மாதர்

பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்பதத்தைப்பெற் றிருக்கைக்குப்பெருவேனோ

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்கரிக்குப்புத் திரற்குற்றுத்தளைபூணச்

சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்திரத்தத்திற் சிரித்துற்றுப்பலபேய்கள்

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்பரப்பொய்க்கட் டறப்புக்குப்பொருதோனே

பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்படைக்கச்சிப் பதிச்சொக்கப்பெருமாளே.

All songs →