Song 317
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
- Sthalam
- காஞ்சீபுரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான
Lyrics
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங்கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்படிபாடிப்
பரிமுகங் கக்கச் செக்கண் விழித்தும்பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்படுகளம் புக்குத் தொக்குந டிக்கும்படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண்டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங்குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந்தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்கனவடங் கட்டப் பட்டக ழுத்துந்திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும்பெருமாளே.
