Song 300
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
- Sthalam
- திருத்தணிகை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்தன தானன தந்தனதானத்தன தானன தந்தனதானத்தன தானன தந்தனதனதான
Lyrics
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர்தெருமீதே
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்வாகக்குழை யாமப ரஞ்சியர்மயலாலே
சீருற்றெழு ஞானமு டன்கல்விநேரற்றவர் மால்கொடு மங்கியெசேருற்றறி வானத ழிந்துயிரிழவாமுன்
சேவற்கொடி யோடுசி கண்டியின்மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கியதேசுக்கதிர் கோடியெ னும்பதமருள்வாயே
போருற்றிடு சூரர்சி ரங்களைவீரத்தொடு பாரில ரிந்தெழுபூதக்கொடி சோரிய ருந்திடவிடும்வேலா
பூகக்குலை யேவிழ மென்கயல்தாவக்குலை வாழைக ளுஞ்செறிபோகச்செநெ லேயுதி ருஞ்செய்களவைகோடி
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்தூரத்தொழு வார்வினை சிந்திடுதாதுற்றெழு கோபுர மண்டபமவைசூழுந்
தார்மெத்திய தோரண மென்தெருதேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்தாமெச்சிய நீள்தணி யம்பதிபெருமாளே.
