Song 219
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
- Sthalam
- சுவாமி மலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தந்த தத்த தானதன தந்த தத்ததானதன தந்த தத்ததனதான
Lyrics
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்மாதரைவ சம்ப டைத்தவசமாகிச்
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தைகாலமுமு டன்கி டக்குமவர்போலே
காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்குநாளுமிக நின்ற லைத்தவிதமாய
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கிலேயடிமை யுங்க லக்கமுறலாமோ
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பைபூகமரு தந்த ழைத்தகரவீரம்
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்ஏரகம மர்ந்த பச்சைமயில்வீரா
சேலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ரபாணியர்தொ ழுந்தி ருக்கைவடிவேலா
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்தசூரனுட லுந்து ணித்தபெருமாளே.
