Song 215
கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
- Sthalam
- சுவாமி மலை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதானன தத்தன தத்தன தத்தனதனதான
Lyrics
கோமள வெற்பினை யொத்தத னத்தியர்காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர்மயில்காடை
கோகில நற்புற வத்தொடு குக்குடஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள்விரகாலே
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர்நெறிகூடா
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்காசுப றிக்கம றித்துமு யக்கிகள்தோதக வித்தைப டித்துந டிப்பவருறவாமோ
மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கியசூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடிவாரண மெச்சஅ ளித்தஅ யிற்குககதிர்காம
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனிமாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பரமாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும்அலைவாயில்
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதினாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தருளிளையோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசுவாமிம லைப்பதி மெச்சிய சித்தஇராஜத லக்ஷண லக்ஷூமி பெற்றருள்பெருமாளே.
