Song 188
மூலங்கிள ரோருரு வாய்நடு
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானந்தன தானன தானனதானந்தன தானன தானனதானந்தன தானன தானனதனதான
Lyrics
மூலங்கிள ரோருரு வாய்நடுநாலங்குல மேனடு வேரிடைமூள்பிங்கலை நாடியொ டாடியமுதல்வேர்கள்
மூணும்பிர காசம தாயொருசூலம்பெற வோடிய வாயுவைமூலந்திகழ் தூண்வழி யேயளவிடவோடிப்
பாலங்கிள ராறுசி காரமொடாருஞ்சுட ராடுப ராபரபாதம்பெற ஞானச தாசிவமதின்மேவிப்
பாடுந்தொனி நாதமு நூபுரமாடுங்கழ லோசையி லேபரிவாகும்படி யேயடி யேனையும்அருள்வாயே
சூலங்கலை மான்மழு வோர்துடிவேதன்தலை யோடும ராவிரிதோடுங்குழை சேர்பர னார்தருமுருகோனே
சூரன்கர மார்சிலை வாளணிதோளுந்தலை தூள்பட வேஅவர்சூளுங்கெட வேல்விடு சேவகமயில்வீரா
காலின்கழ லோசையு நூபுரவார்வெண்டைய வோசையு மேயுககாலங்களி னோசைய தாநடமிடுவோனே
கானங்கலை மான்மக ளார்தமைநாணங்கெட வேயணை வேள்பிரகாசம்பழ னாபுரி மேவியபெருமாளே.
