Song 171
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
- Sthalam
- பழநி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தந்த தத்த தானனதனதனன தந்த தத்த தானனதனதனன தந்த தத்த தானனதனதான
Lyrics
நிகமமெனி லொன்று மற்று நாடொறுநெருடுகவி கொண்டு வித்தை பேசியநிழலர்சிறு புன்சொல் கற்று வீறுளபெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமரநிபிடமிட வந்து கைக்கு மோதிரநெடுகியதி குண்ட லப்ர தாபமுமுடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களுமுதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்முடிவிலவை யொன்று மற்று வேறொருநிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிதுமுடியவுனை நின்று பத்தி யால்மிகமொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவரஅருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொருசெழியனுடல் சென்று பற்றி யாருகர்திகையினமண் வந்து விட்ட போதினுமமையாது
சிறியகர பங்க யத்து நீறொருதினையளவு சென்று பட்ட போதினில்தெளியஇனி வென்றி விட்ட மோழைகள்கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியைவரைவறம ணந்து நித்த நீடருள்வகைதனைய கன்றி ருக்கு மூடனைமல்ருபம்
வரவரம னந்தி கைத்த பாவியைவழியடிமை கொண்டு மிக்க மாதவர்வளர்பழநி வந்த கொற்ற வேலவபெருமாளே.
