Song 158
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2தானதன தந்த தானதன தந்ததானதன தந்த தானதன தந்ததானதன தந்த தானதன தந்த தனதான
Lyrics
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்புமாயமல பிண்ட நோயிடுகு ரம்பைதீநரிகள் கங்கு காகமிவை தின்பதொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்தமாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்புசேரிடந ரம்பு தானிவைபொ திந்துநிலைகாணா
ஆயுதுந மன்கை போகவுயி ரந்தநாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பையாகியவு டம்பு பேணிநிலை யென்றுமடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கிதானுமிக வந்து மேவிடம யங்குமாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்புபுரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டுபார்முழுது மண்ட கோளமுந டுங்கவாய்பிளறி நின்று மேகநிகர் தன்கையதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்குநீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்தவாரண இரண்டு கோடொடிய வென்றநெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்துமேயல்புரி செங்கண் மால்மருக துங்கவேலகிர வுஞ்ச மால்வரையி டிந்துபொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்குகார்கலிசை வந்த சேவகன்வ ணங்கவீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர்பெருமாளே.
