Song 1316
துடிகொ ணோய்க ளோடு வற்றி
- Sthalam
- பழமுதிர்சோலை
- Raagam
- சங்கராபரணம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)தனன தான தான தத்ததனன தான தான தத்ததனன தான தான தத்ததனதான
Lyrics
துடிகொ ணோய்க ளோடு வற்றிதருண மேனி கோழை துற்றஇரும லீளை வாத பித்தமணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டுஉ லக நூல்கள் வாதை யற்றுசுகமு ளாநு பூதி பெற்றுமகிழாமே
உ டல்செய் கோர பாழ்வ யிற்றைநிதமு மூணி னாலு யர்த்தியுயிரினீடு யோக சித்திபெறலாமே
உ ருவி லாத பாழில் வெட்டவெளியி லாடு நாத நிர்த்தஉ னது ஞான பாத பத்மமுறுவேனோ
கடிது லாவு வாயு பெற்றமகனும் வாலி சேயு மிக்கமலைகள் போட ஆழி கட்டியிகலுர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கிதலைக ளாறு நாலு பெற்றஅவனை வாளி யால டத்தன்மருகோனே
முடுகு வீர சூர பத்மர்தலையின் மூளை நீறு பட்டுமுடிவ தாக ஆடு நிர்த்தமயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்றபுநித சோலை மாமலைக்குள்முருக வேல த்யாகர் பெற்றபெருமாளே.
