Song 1304
வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பூர்வி கல்யாணி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 2 களை (12)தானத் தத்தத் தத்தன தத்தத்தனதான
Lyrics
வானப் புக்குப் பற்றும ருத்துக்கனல்மேவு
மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப்பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத்தமிழாலுன்
நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குற விக்குக்கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப்பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத்தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்பெருமாளே.
