Song 1289
சினத்துச் சீறிய ...... வழிகாணச்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தத் தானனதனதான
Lyrics
சினத்துச் சீறியவழிகாணச்
சிரித்துப் பேசியுமயல்பூண
கனத்துப் போர்செயுமுலைதோணக்
கலைக்குட் பாதியுமறைவாக
மனத்துக் காறுதல்வருமாறு
மலைப்பப் பேணியுமிகவாய
தனத்தைச் சூறைகொள்மடவார்தம்
சதிக்குப் போம்வழிதவிர்வேனோ
தெனத்தத் தாதெனஎனவேபண்
திருத்தத் தோடளியிசைபாடும்
புனத்துக் காவல்கொள்குறமாதின்
புணர்ச்சிக் கேயொருவழிதேடி
இனத்துக் காவலரறியாமல்
இணக்கித் தோகையைமகிழ்வோயென்
றெனக்குத் தாளிணையருள்வாய்சூர்
இறக்கப் போர்செய்தபெருமாளே.
