Song 1279
வீணையிசை கோட்டி யாலமிட றுட்டு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தாத்த தானதன தாத்ததானதன தாத்ததனதான
Lyrics
வீணையிசை கோட்டி யாலமிட றுட்டுவீரமுனை யீட்டிவிழியார்தம்
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்வீழுமயல் தீட்டியுழலாதே
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டையாவலுட னீட்டியழியாதே
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டியானநிலை காட்டியருள்வாயே
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்கேள்சுறுதி நாட்டிலுறைவோனே
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டுகீரரியல் கேட்டக்ருபைவேளே
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டிசீதவிரு கோட்டிலணைவோனே
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டிதேவர்சிறை மீட்டபெருமாளே.
