Song 1273
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தானனத் தத்ததன தானனத்தத்ததன தானனத்தனதான
Lyrics
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்பட்டகரிபோலுமத்தனமாதர்
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்பட்டுமுகில் போல்மனத்திருள்மூடிச்
சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்துக்கமுற வேமிகச்சுழலாதே
சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச்சொற்கமல வாழ்வுசற்றருள்வாயே
கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்புற்றஅதி கோபனச்சுதன்மாயன்
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்கிச்சைமொழி கூறுநற்குமரேசா
பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்பற்றுவிடு மாமறைப்பொருளானாய்
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்பக்ஷபத தேவர்மெய்ப்பெருமாளே.
