Song 1269
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- தன்யாஸி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதன தனான தான தனதன தனான தானதனதன தனான தானதனதான
Lyrics
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபிமனநிலை நிலாத பேயன்அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடிவரும்வகை யிதேது காயமெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழைவினையிகல் விடாத கூளனெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாகமிகுமுன ருப தானமருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலையியலொடு கடாவு தீரகுமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்இளமையது தானு மாகநினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னானநடைபெறு க்டுர மானமயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவுநவமணி யுலாவு மார்பபெருமாளே.
