Song 1255
தோரண கனக வாசலில் முழவு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- மோஹனம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2தானன தனன தானன தனனதானன தனனதனதான
Lyrics
தோரண கனக வாசலில் முழவுதோல்முர சதிரமுதிராத
தோகையர் கவரிவீசவ யிரியர்தோள்வலி புகழமதகோப
வாரண ரதப தாகினி துரகமாதிர நிறையஅரசாகி
வாழினும் வறுமை கூரினு நினதுவார்கழ லொழியமொழியேனே
பூரண புவன காரண சவரிபூதர புளகதனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்பூபதி நகரிகுடியேற
ஆரண வனச ஈரிரு குடுமிஆரியன் வெருவமயிலேறு
மாரிய பரம ஞானமு மழகுமாண்மையு முடையபெருமாளே.
