Song 1252
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்தத்த தத்த தானனத்தனதான
Lyrics
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்சுக்கி லக்க லாமிர்தப்பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்சுத்த சொற்ப கீரதித்திரைநீலம்
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்பொற்பு மத்து வேணியர்க்கருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்புற்பு தப்பி ராணனுக்கருள்வாயே
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்பக்க மிட்டு லாவியச்சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்பத்ம சிட்ட னோடமுத்தெறிமீனக்
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்துட்க முத்து வாரணச்சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்கைப்பி டித்த சேவகப்பெருமாளே.
