Song 1242
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்த தான தந்த தானத்த தான தந்ததானத்த தான தந்ததனதான
Lyrics
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டுசேவித்து மாசை கொண்டுமுழல்வேனைச்
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்புசீரற்று வாழு மின்பம்நலியாதே
ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்றுமாருக்கு மேவி ளம்பஅறியாதே
ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்ஆவிக்கு ளேது லங்கிஅருளாதோ
மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்வாய்விட்டு மாதி ரங்கள்பிளவாக
வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்வான்முட்ட வீறு செம்பொன்வரையோடு
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்தகோதற்ற வேடர் தங்கள்புனம்வாழுங்
கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டுகூடிக்கு லாவு மண்டர்பெருமாளே.
