Song 1240
சாங்கரிபாடியிட வோங்கிய ஞானசுக
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- வாசஸ்பதி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தாந்தன தானதன தாந்தன தானதனதாந்தன தானதனதனதான
Lyrics
சாங்கரிபாடியிட வோங்கிய ஞானசுகதாண்டவ மாடியவர்வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்தாங்களு ஞானமுறவடியேனுந்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடுதோன்றிய சோதியொடுசிவயோகந்
தூண்டிய சீவனோடு வேண்டிய காலமொடுசோம்பினில் வாழும்வகைஅருளாதோ
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்வான்பொழில் சூழும்வயலயலேறி
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்மாந்திய வாரணியமலைமீதிற்
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணிபூண்பன பாரியனதனபாரப்
பூங்குற மாதினுட வாடியிருள்பூம்பொழில் மேவிவளர்பெருமாளே.
