Song 1225
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தாத்த தத்தத் தாத்ததத்தத் தாத்ததனதான
Lyrics
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்டகத்திற் கோட்டுகிரியாலங்
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்கயற்கட் கூற்றில்மயலாகி
அச்சக் கூச்ச மற்றுக் கேட்டவர்க்குத் தூர்த்தனெனநாளும்
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்கறப்பித் தாய்த்திரியலாமோ
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்தபத்மக் கூட்டிலுறைவோரி
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்பத்தக் கூட்டரியல்வானம்
மெச்சிப் போற்ற வெற்புத் தோற்றுவெட்கத் கோத்தகடல்மீதே
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டைவெட்டிச் சாய்த்தபெருமாளே.
