Song 1212
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- யமுனா கல்யாணி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதானனா தத்த தானனா தத்ததானனா தத்ததனதான
Lyrics
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்மமானபூ வைத்துநடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டியொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்பமாசிலோர் புத்தியளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ரவாளபா தத்திலணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்தமூரல்வே டிச்சிதனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்தமூரிவே ழத்தன்மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டுவேகவே தித்துவருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்துவீரவேல் தொட்டபெருமாளே.
