Song 1209
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தத்தனாத் தனதன தத்தனாத்தனதன தத்தனாத்தனதான
Lyrics
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்கறுமுக நித்தர்போற்றியநாதா
அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்தணிதரு முத்திவீட்டணுகாதே
பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்பரிவொ தத்தைமார்க்கிதமாடும்
பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்படியில்ம னித்தர்தூற்றிடலாமோ
குலகிரிபொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்கொடியஅ ரக்கரார்ப்பெழவேதக்
குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்குடுமியை நெட்டைபோக்கியவீரா
கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்கழுநிரை முட்டஏற்றியதாளக்
கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்கருணையு மொப்பிலாப்பெருமாளே.
