Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1200

வாடையில் மதனை யழைத்துற்று

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தானன தனன தனத்தத்ததானன தனன தனத்தத்ததானன தனன தனத்தத்ததனதான

Lyrics

வாடையில் மதனை யழைத்துற்றுவாள்வளை கலக லெனக்கற்றைவார்குழல் சரிய முடித்திட்டுதுகிலாரும்

மால்கொள நெகிழ வுடுத்திட்டுநூபுர மிணையடி யைப்பற்றிவாய்விட நுதல்மிசை பொட்டிட்டுவருமாய

நாடக மகளிர் நடிப்புற்றதோதக வலையில கப்பட்டுஞாலமு முழுது மிகப்பித்தனெனுமாறு

நாணமு மரபு மொழுக்கற்றுநீதியு மறிவும றக்கெட்டுநாயடி மையுமடி மைப்பட்டுவிடலாமோ

ஆடிய மயிலினை யொப்புற்றுபீலியு மிலையு முடுத்திட்டுஆரினு மழகு மிகப்பெற்றுயவனாளும்

ஆகிய விதண்மிசை யுற்றிட்டுமானின மருள விழித்திட்டுஆயுத கவணொரு கைச்சுற்றிவிளையாடும்

வேடுவர் சிறுமி யொருத்திக்குயான்வழி யடிமை யெனச்செப்பிவீறுள அடியிணை யைப்பற்றிபலகாலும்

வேதமு மமரரு மெய்ச்சக்ரவாளமு மறிய விலைப்பட்டுமேருவில் மிகவு மெழுத்திட்டபெருமாளே.

All songs →