Song 1194
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- சங்கரானந்தப்ரியா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தந்தன தாத்தன தந்தனதனன தந்தன தாத்தன தந்தனதனன தந்தன தாத்தன தந்தனதனதான
Lyrics
முனைய ழிந்தது மேட்டிகு லைந்ததுவயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்ததுமுதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்ததுப்ரபையான
முகமி ழிந்தது நோக்குமி ருண்டதுஇருமல் வந்தது தூக்கமொ ழிந்ததுமொழித ளர்ந்தது நாக்குவி ழுந்ததுஅறிவேபோய்
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலுமவச மும்பல ஏக்கமு முந்தினநெறிம றந்தது மூப்பு முதிர்ந்ததுபலநோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டதுசலம லங்களி னாற்றமெ ழுந்ததுநிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினிதருள்வாயே
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறையிடுமி டும்புள ராக்கதர் தங்களில்வெகுகோடி
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்தசைசி ரங்களு நாற்றிசை சிந்திடஇடிமு ழங்கிய வேற்படை யொன்றனையெறிவோனே
தினைவ னங்கிளி காத்தச வுந்தரிஅருகு சென்றடி போற்றிம ணஞ்செய்துசெகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடுமிளையோனே
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்குமர கந்தப ராக்ரம செந்தமிழ்தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பியபெருமாளே.
