Song 1180
பூசல்த ருங்கய லும்பொ ருந்திய
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தந்தன தந்த தந்தனதானன தந்தன தந்த தந்தனதானன தந்தன தந்த தந்தனதனதான
Lyrics
பூசல்த ருங்கய லும்பொ ருந்தியவாசந றுங்குழ லுந்து லங்கியபூரண கும்பமெ னுந்த னங்களுமடமாதர்
போகம டங்கலை யும்பு ணர்ந்தநுராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழைபோயக லும்படி யொன்றை யன்புறநினையாதே
ஆசையெ னும்படி யுந்த னங்களுமோகைந டந்திட வுந்தி னங்களும்ஆருட னும்பகை கொண்டு நின்றுறநடமாடி
ஆடிய பம்பர முன்சு ழன்றெதிரோடிவி ழும்படி கண்ட தொன்றுறஆவிய கன்றுவி டும்ப யங்கெடஅருள்வாயே
வாசவ னன்புவி ளங்க நின்றசுரேசர்கு லங்கள டங்க லுங்கெடவானவர் நின்றுதி யங்கு கின்றதொர்குறைதீர
வாரிய திர்ந்துப யந்து நின்றிடமேருஅ டங்கஇ டிந்து சென்றிடவாகைபு னைந்தொரு வென்றி கொண்டருளிளையோனே
வீசிய தென்றலொ டந்தி யும்பகையாகமு யங்கஅ நங்க னும்பொரவேடையெ னும்படி சிந்தை நொந்திடஅடைவாக
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சனவேலினு ளங்கள்க லங்கி யின்புறவேளையெ னும்படி சென்றி றைஞ்சியபெருமாளே.
