Song 1162
ஞானாவி பூஷணி காரணி காரணி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தானன தானன தானனதானான தானன தானன தானனதானான தானன தானன தானனதனதான
Lyrics
ஞானாவி பூஷணி காரணி காரணிகாமாவி மோகினி வாகினி யாமளைமாமாயி பார்வதி தேவிகு ணாதரிஉ மையாள்தன்
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிகவேதாக மேயருள் தேவர்கள் தேவநலீசாச டாபர மேசர்சர் வேசுரிமுருகோனே
தேனார்மொ ழீவளி நாயகி நாயகவானாடு ளோர்தொழு மாமயில் வாகனசேணாளு மானின்ம னோகர மாகியமணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்மோகாவி காரவி டாய்கெட ஓடவெசீராக வேகலை யாலுனை ஓதவும்அருள்வாயே
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களைசூராடி யேகழு மீதினி லேறிடகூனான மீனனி டேறிட கூடலில்வருவோனே
பேராண்மை யாளனி சாசரர் கோனிருகூறாக வாளிதொ டூரகு நாயகன்பூவாய னாரணன் மாயனி ராகவன்மருகோனே
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெசேணாடு ளோரவர் வீடதி டேறிடகோனாக வேவரு நாதகு ரூபரகுமரேசா
வாசாம கோசர மாகிய வாசகதேசாதி யோரவர் பாதம தேதொழபாசாவி நாசக னாகவு மேவியபெருமாளே.
