Song 1159
செங்கை னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதனதந்த தத்தன தானாதனதனதான
Lyrics
செங்கை னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்தெண்டெ னத்துணை தாள்மேல்விழஅமராடிச்
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரியத்தினி லோடாசிலதிண்டி றற்றவ வாள்வீரரொடிகலாநின்
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மனமந்தி பட்டிருள் மூடாவகையவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயநலன்பு வைத்தரு ளாமோர்கழலருளாதோ
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகிகும்பி டத்தகு பாகீரதிமதிமீது
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதரகுண்ட லத்தர்பி னாகாயுதருடனேயச்
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்தங்க ளைச்சிறை மீளாயெனஅசுரேசன்
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகரசண்ட விக்ரம வேலேவியபெருமாளே.
