Song 1142
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தானன தனத்த தத்தனதானான தானன தனத்த தத்தனதானான தானன தனத்த தத்தனதந்ததான
Lyrics
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டறவூசாடு பாழ்குடி லெடுத்த திற்படிஓயாத மாமய லுழற்றி னிற்படுவம்பனேனை
ஊதாரியாய்விடு சமத்தில் நிற்பதுமாராத காதலை மனத்தில் வைப்பதுமூரோடு போயெதிர் பிணக்கி னிற்பதுமுந்திடாதே
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொருநாய்போல வேயவர் வசத்தில் நிற்பதுசீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தனமென்றுநீபச்
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்சீராடி நாண்மல ரெனப்ரியப்படுசீர்பாத போதக மநுக்ர கிப்பதுமெந்தநாளோ
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்மாமேரு வாரியில் திரித்து விட்டவர்மாடோ டு போய்வரு மிடைக்குலத்தவரன்றுவாவி
வாய்நாக மோலிட பிடித்த சக்கிரவாளேவி யேகர வினைத்த றித்தவர்மாமாய னாயுல களித்த வித்தகர்தங்கைவாழ்வே
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியைகாணாது போயியல் புணர்ச்சி யிட்டருள்கந்தவேளே
காரேழு மாமலை யிடித்து ருக்கெடகாராழி யேழவை கலக்கி விட்டுயர்காவான நாடர்கள் பகைச்ச வட்டியதம்பிரானே.
