Song 1134
இருகுழை மீதோடி மீளவும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானான தானனதனதன தானான தானனதனதன தானான தானனதனதான
Lyrics
இருகுழை மீதோடி மீளவும்கயல்களு மாலால காலமும்ரதிபதி கோலாடு பூசலுமெனவேநின்
றிலகிய கூர்வேல் விலோசனம்ருகமத பாடிர பூஷிதஇளமுலை மாமாத ரார்வசமுருகாதே
முருகவிழ் கூதாள மாலிகைதழுவிய சீர்பாத தூளியின்முழுகிவி டாய்போ மனோலயம்வரவோது
முழுமதி மாயாவி காரமுமொழிவது வாசாம கோசரமுகுளித ஞானோப தேசமுமருள்வேணும்
அருமறை நூலோதும் வேதியன்இரணிய ரூபாந மோவெனஅரிகரிநாராய ணாவெனஒருபாலன்
அவனெவ னாதார மேதெனஇதனுள னோவோது நீயெனஅகிலமும் வாழ்வான நாயகனெனவேகி
ஒருகணை தூணோடு மோதிடவிசைகொடு தோள்போறு வாளரியுகிர்கொடு வாரா நிசாசரனுடல்பீறும்
உ லகொரு தாளான மாமனும்உ மையொரு கூறான தாதையும்உ ரைதரு தேவாசு ராதிபர்பெருமாளே.
