Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1128

ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தனதானா தத்தன தத்தனதனதான

Lyrics

ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொருதாகா ரைத்தொடர் கைக்கெணும்விழியாலே

ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறிவார்போ கச்செயல் விச்சைகள்விலைகூறிக்

கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்கூறா கப்பெறில் நிற்கவுமிலதானார்

கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்கோமா ளத்துய ருட்பயமுறலாமோ

பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரிபால்பார் வைக்கள விட்டுமையுறுபோதிற்

பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்பாலா பத்தரிடத்தியல்பயில்வோனே

மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரைவேர்மா ளப்பொரு திட்டொளிவிடும்வேலா

மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடுவேதா வைச்சிறை யிட்டருள்பெருமாளே.

All songs →