Song 1123
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கேவித்தா ரத்திற்பலகாலும்
வேட்கா மற்சே ரிச்சோ ரர்க்கேவித்தா சைச்சொற்களையோதிக்
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தாரைப்போ லக்கற்பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பாடற்கே நற்சொற்றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்முற்பால் வெற்பிற்புனமானைப்
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பாதத்தாள் பற்றிப்புகல்வோனே
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்வைத்தார் முத்தச்சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
