Song 1120
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்வைத்தே பத்திப்படவேயும்
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தாசற்கா ரத்துக்கிரைதேடி
எத்தே சத்தோ டித்தே சத்தோடொத்தேய் சப்தத்திலுமோடி
எய்த்தே நத்தா பற்றா மற்றாதிற்றே முக்கக்கடவேனோ
சத்தே முற்றா யத்தா னைச்சூர்கற்சா டிக்கற்பணிதேசா
சட்சோ திப்பூ திப்பா லத்தாஅக்கோ டற்செச்சையமார்பா
முத்தா பத்தா ரெட்டா வைப்பாவித்தா முத்தர்க்கிறையோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
